புதுச்சேரி : புதுச்சேரியில் இரு சுயேட்சை வேட்பாளர்களின் கார்கள் சேதப்படுத்தப்பட்டன.
புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுயேட்சை வேட்பாளர் சிவசங்கர். நேற்று ஓட்டுப்பதிவுகளை பார்வையிட தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு சென்றார். மேரி உழவர்கரை அருகில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே PY.01.BR.7788 என்ற மாருதி சுசூசி காரை நிறுத்திச் சென்றார். ஓட்டுச்சாவடிக்கு சென்று திரும்பியபோது, காரின் பின் பக்கத்தில் வேறு வாகனம் மோதி, கண்ணாடி உடைத்து வாகனம் சேதப்படுத்தப்பட்டி ருந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து புகார் ஏதும் போலீசில் தெரிவிக்கவில்லை.
திருபுவனை சுயேட்சை வேட்பாளர் அங்காளன். நேற்று காலை திருவண்டார்கோவில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு சென்றார். அங்கு வந்த மர்ம நபர்கள், அங்காளன் வந்த இனோவா காரின் இடதுபக்க கதவில் உள்ள சைடு மிரர் (கண்ணாடி) அடித்து உடைத்துச் சென்றனர். இது தொடர்பாக, அங்காளன் திருபுவனை போலீசில் புகார் அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE