பொது செய்தி

இந்தியா

237 பேருக்கு தொற்று: இரு மூதாட்டிகள் பலி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று 237 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானதுடன், இரண்டு மூதாட்டிகள் இறந்தனர். மாநிலத்தில் நேற்று 3018 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 145; காரைக்கால் 68; ஏனாம் 9; மாகி 15 பேர் உட்பட 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 776 ஆனது. மருத்துவமனைகளில் 46 பேர், வீடுகளில் 1347 பேர் உட்பட 1773 பேர்

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று 237 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானதுடன், இரண்டு மூதாட்டிகள் இறந்தனர்.

மாநிலத்தில் நேற்று 3018 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 145; காரைக்கால் 68; ஏனாம் 9; மாகி 15 பேர் உட்பட 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 776 ஆனது. மருத்துவமனைகளில் 46 பேர், வீடுகளில் 1347 பேர் உட்பட 1773 பேர் சிகிச்சை யில் உள்ளனர். நேற்று புதுச்சேரியில் 62 வயது மூதாட்டியும், காரைக்காலில் 87 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றினால் இறந்தனர்.

இதனால் தொற்றினால் இறந்தோர் எண்ணிக்கை 686 ஆனது. நேற்று புதுச்சேரியில் 93 பேர், காரைக்கால் 37; மாகி 9 பேர் உட்பட 139 பேர் வீடு திரும்பியதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 317 ஆனது.புதுச்சேரி பிராந்தியத்தில் 31 ஆயிரத்து 680 பேர், காரைக்கால் 4244, ஏனாம் 2096, மாகி 2297 பேர் இது வரை குணமாகியுள்ளனர். மாநிலத்தில் இது வரை 6 லட்சத்து 85 ஆயிரத்து 92 பேருக்கு பரிசோதனை செய்ததில், 6 லட்சத்து 30 ஆயிரத்து 675 பேருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X