பொது செய்தி

இந்தியா

'பரிசு டோக்கன்' மழையில் திக்குமுக்காடும் வாக்காளர்கள் 

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன் வழங்கும் கலாசாரம் புதுச்சேரியில் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பண மழை பொழிந்துள்ளனர். தேர்தல் துறையினர் விழிப்புடன் இரவு பகலாக கண்காணித்த போதும், பெரும்பாலான தொகுதிகளில் பண பட்டுவாடாவை கன கச்சிதமாக நடத்தி முடிந்துள்ளனர். இத்துடன், டோக்கன் வழங்கும்

புதுச்சேரி, : வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன் வழங்கும் கலாசாரம் புதுச்சேரியில் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பண மழை பொழிந்துள்ளனர். தேர்தல் துறையினர் விழிப்புடன் இரவு பகலாக கண்காணித்த போதும், பெரும்பாலான தொகுதிகளில் பண பட்டுவாடாவை கன கச்சிதமாக நடத்தி முடிந்துள்ளனர். இத்துடன், டோக்கன் வழங்கும் கலாசாரமும் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. குறிப்பாக, கடந்த 2, 3 நாட்களில் பரிசு டோக்கன் வினியோகம் ஜரூராக நடந்துள்ளது. தங்களது சின்னத்தையோ, பெயரையோ நேரடியாக குறிப்பிடாமல், சின்னத்தை ஒத்திருக்கும் படத்தையோ அல்லது தங்கள் கட்சி தலைவர்களின் படத்தையோ அச்சிட்டு வழங்கிய டோக்கன்களை பார்த்து வாக்காளர்கள் திகைத்து நின்றுள்ளனர்.

பல தொகுதிகளில் வீடுகளின் கதவை தட்டி எழுப்பி நள்ளிரவிலும், அதிகாலை நேரங்களிலும் டோக்கன்களை மர்ம நபர்கள் வழங்கிச் சென்றுள்ளனர். கதவை திறக்காத வீடுகளின் வாசலில் டோக்கனை வைத்துவிட்டு சென்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.டோக்கன்களில் டிவி, இன்டெக் ஷன் ஸ்டவ், புடவை, பாத்திரங்கள், வாட்டர் பியூரிபையர், நகை வழங்கப்படும் என, தாறுமாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரணி வேட்பாளரின் பண பட்டுவாடாவை மிஞ்சும் வகையில் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஏட்டிக்கு போட்டியாக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X