பொது செய்தி

தமிழ்நாடு

கள்ள ஓட்டு பதிவு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சங்கராபுரம், : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டு பதிவானதால், அ.தி.மு.க., - போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில், சங்கராபுரம் தொகுதி காட்டுவன்னஞ்சூரை சேர்ந்த வாலிபர் புருஷோத்தம் நேற்று மதியம் 1:00 மணிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, அங்கிருந்த

சங்கராபுரம், : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டு பதிவானதால், அ.தி.மு.க., - போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில், சங்கராபுரம் தொகுதி காட்டுவன்னஞ்சூரை சேர்ந்த வாலிபர் புருஷோத்தம் நேற்று மதியம் 1:00 மணிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள், ஏற்கனவே ஓட்டு பதிவாகி உள்ளதாக கூறினர். ஆத்திரமடைந்த புருஷோத்தமன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன், ஓட்டுச்சாவடி முகவர்களிடம் தகராறு செய்தனர். அவர்களை, போலீசார் வெளியேற்றினர்.அதனை அறிந்த அ.தி.மு.க.,வினர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி., விஜயராமுலு, அ.தி.மு.க.,வினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார். அதன்பிறகு 20 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. புருஷோத்தமனுக்கு டெண்டர் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X