காங்.,- - தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் மாஜி., முதல்வர் நாராயணசாமி பேட்டி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காங்.,- தி.மு.க. கூட் டணி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நேற்று காலை 8:00 மணிக்கு, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு, மிஷன் வீதி அரசு பெண்கள் பிரஞ்சு பள்ளியில் ஓட்டளித்தார்.பின் அவர் அளித்த பேட்டி:புதுச்சேரியில் மதவாத சக்திகளுக்கும்,

புதுச்சேரி : காங்.,- தி.மு.க. கூட் டணி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நேற்று காலை 8:00 மணிக்கு, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு, மிஷன் வீதி அரசு பெண்கள் பிரஞ்சு பள்ளியில் ஓட்டளித்தார்.பின் அவர் அளித்த பேட்டி:புதுச்சேரியில் மதவாத சக்திகளுக்கும், பிரிவினைவாத சக்திகளுக்கும், அனைத்து மதத்தையும் அரவணைத்து செல்லும் காங்., - தி.மு.க., கூட்ட ணிக்கு போட்டி நடக்கிறது. மாநில அந்தஸ்து பெறுதல், கடன் தள்ளுபடி, 20 சதவீதம் மானியம், 41 சதவீதமாக உயர்த்துவோம்.

அரசு, தனியார் துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்புவோம் என ஓட்டு சேகரித்தோம்.காங்., - தி.மு.க., கூட்டணிக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. எதிர்கட்சிகளான என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலில் மத்திய பா.ஜ., அரசு, தனது அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் புதுச்சேரி மாநிலத்தில் ஜனநாயக படுகொலை செய்துள்ளது. பா.ஜ., அடக்கு முறை மிரட்டல்கள், வருமான வரித்துறை ஏவி, திட்டமிட்டு காங்., - தி.மு.க., கட்சி வேட்பாளர் உறவினர் வீடுகளில் சோதனை செய்தனர்.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.புதுச்சேரியில் கடந்த காலத்தில் காங்.,- தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி போல் மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X