பொது செய்தி

தமிழ்நாடு

ரிஷிவந்தியம் தொகுதியில்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் தொகுதியில் பழுதடைந்த 10 ஓட்டு இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. ரிஷிவந்தியம் தொகுதியில் நேற்று காலை 7:00 மணிக்கு 374 ஓட்டுசாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.முன்னதாக மாதிரி ஓட்டு பதிவின் போது, மையனூர்(130), சித்தேரிப்பட்டு(155), சாங்கியம்(217), அவிரியூர்(125), புதுபல்லகச்சேரி(168), பாசார்(143), ரிஷிவந்தியம்(183), மண்டகப்படி(177), சித்தால்(149),

தியாகதுருகம் : ரிஷிவந்தியம் தொகுதியில் பழுதடைந்த 10 ஓட்டு இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது.

ரிஷிவந்தியம் தொகுதியில் நேற்று காலை 7:00 மணிக்கு 374 ஓட்டுசாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.முன்னதாக மாதிரி ஓட்டு பதிவின் போது, மையனூர்(130), சித்தேரிப்பட்டு(155), சாங்கியம்(217), அவிரியூர்(125), புதுபல்லகச்சேரி(168), பாசார்(143), ரிஷிவந்தியம்(183), மண்டகப்படி(177), சித்தால்(149), வடக்குதாங்கல் (205ஏ) ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. தகவலறிந்த தொகுதி தேர்தல் அதிகாரி, ராஜா மணிக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு குறித்த நேரத்தில் ஓட்டுப்பதிவு துவங்கியது.

அதேபோல் எடுத்தனுார்(88), மேமாளூர்(298) ஆகிய இரு ஓட்டு சாவடியில் இயந்திரம் பழுதாகி சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதத்துக்குப் பின் ஓட்டுப்பதிவு துவங்கியது. திருக்கோவிலுார் -திருக்கோவிலூர் தொகுதியில் மொத்தம் 349 ஓட்டுச்சாவடிகளில் கலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி சீராக நடந்து வந்தது. காலை 10:00 மணி அளவில் சிறுவானுார் ஓட்டுச்சாவடியில் விவிபேட் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. உடனடியாக விவிபேட் எந்திரம் மாற்றப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது.

அதேபோல் அடுக்கம் ஓட்டுசாவடியில் 42 ஓட்டுகள் பதிவான நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. வலையாம்பட்டிலும் இது போன்ற பிரச்னை எழுந்தது. இதன் காரணமாக இந்த இரண்டு ஓட்டுப்பதிவு மையத்திலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முழுவதுமாக மாற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X