தேர்தல் துறை அதிகாரிகளை கண்டித்து வேட்பாளர் தர்ணா

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஓட்டளிப்பதை வீடியோ எடுப்பதை தடுத்த தேர்தல் துறையை கண்டித்து, வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அரிக்கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர், நேற்று காலை 10:30 மணிக்கு, கடலுார் சாலை, அர்ச்சுன சுப்ராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளி ஓட்டுச்

புதுச்சேரி : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஓட்டளிப்பதை வீடியோ எடுப்பதை தடுத்த தேர்தல் துறையை கண்டித்து, வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அரிக்கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர், நேற்று காலை 10:30 மணிக்கு, கடலுார் சாலை, அர்ச்சுன சுப்ராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளி ஓட்டுச் சாவடியில் ஓட்டளிக்கச் சென்றார். அவர் ஓட்டளிப்பதை வீடியோ எடுக்க தேர்தல் துறை அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து, அவர் ஓட்டுச்சாவடி அருகே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் ஓட்டளிப்பதை வீடியோ எடுக்க அனுமதிக்கும் தேர்தல் துறை, வேட்பாளரான நான் ஓட்டளிப்பதை போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்க வில்லை என குற்றம்சாட்டினார். தேர்தல் துறையினர், உயரதிகாரிகளிடம் பேசி, அரிக்கிருஷ்ணனுடன் 3 பேர் மட்டுமே, சென்று போட்டோ எடுக்க அனுமதித்தனர். பின்னர், போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X