புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இயந்திரம் பழுதானதால் ஓட்டுப்பதிவு தாமதமானது.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலையொட்டி ராஜ்பவன் தொகுதி, வைத்திக்குப்பம் அரசு நடு நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், இயந்திரம் பழுதால் 20 நிமிடம் ஓட்டுப்பதிவு தாமதமானது. தட்டாஞ்சாவடி தொகு குண்டுப்பாளையம் அரசு தொடக்க பள்ளி, ஓட்டுச்சாவடியில், நேற்று 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. 1 மணி நேரத்திற்கு பிறகு, பழுது சரி செய்து ஓட்டுப்பதிவு துவங்கியது.அரியாங்குப்பம் தொகுதி தேங்காய்த்திட்டு ஆரம்ப பள்ளி ஓட்டுச் சாவடியில், காலை 11:30 மணிக்கு, ஓட்டு பதிவு மிஷின் பழுதானது.
பகல் 12:30 மணிக்கு, மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டது. முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளியில், மதியம் 1:00 மணிக்கு இயந்திரம் பழுதானது. பகல் 2:00 மணிக்கு, மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டது.வில்லியனுார் தொகுதி தட்டாஞ்சாவடி அரசு பள்ளி மையத்தில் இயந்திரம் பழுதானது. அதிகாரிகள் மாற்று இயந்திரம் வைத்தபின் ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு நடந்தது. லட்சுமி நகர் ஓட்டுச் சாவடி மற்றும் கொம்பாக்கம் அரசு பள்ளி ஓட்டுச் சாவடிகளில் ஓட்டளித்த போது தாமதமாக ஒலி வந்ததால் சிறிது நேரம் தடைபட்டது. அதிகாரிகள் சரி செய்தனர்
.ஊசுடு தொகுதி: சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று காலை 7:00 மணியளவில் இயந்திரம் பழுதானது. பின், 8:30 மணியளவில் அதிகாரிகள் சரி செய்த பின் வாக்காளர்கள் ஓட்டளித்தனர். பொறையூர் அரசு பள்ளியில் துவக்கத்தில் இயந்திரம் பழுதானது. அதிகாரிகள் சரி செய்த பின், ஒரு மணி நேரம் வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டளித்தனர். கூடப்பாக்கம் 16 எண் பூத்தில் 102 ஓட்டு பதிவான நிலையில் இயந்திரம் பழுதானது. பின், வேறு இயந்திரம் வைத்தனர்.மங்கலம் தொகுதி: மேல்சாத்தமங்கம் கிராமத்தில் அரசு பள்ளி பூத்தில் துவக்கத்திலேயே இயந்திரம் பழுதாகி 45 நிடத்தில் மாற்று இயந்திரம் பொறுத்தப்பட்டது.
கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப் பள்ளி மையத்தில் இயந்திரம் பழுதானதால் சிறிது நேரம் ஓட்டுப்பதிவு பாதித்தது.மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் நேற்று காலை 8:00 மணியளவில் பழுதடைந்தது. பழுதை சரி செய்ய முடியாததால், மாற்று இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த மையத்தில் 30 நிமிடம் ஓட்டுப் பதிவு நிறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தனித் தொகுதி, மேலகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டுச் சாவடியில் நேற்று காலை 7.50 மணிக்கு ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதாகி மாற்று இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஓட்டளிக்க வந்த பெண்கள் 2 மணி நேரம் காத்திருந்து ஓட்டளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE