பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகள் 4 பேர் ஓட்டு போட்டனர்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 4 பேர் முழு பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில், மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை கொரோனா பாதித்தவர்கள் ஓட்டு போட வாய்ப்பு வழங்கியது. அதனால், சுகாதாரத்துறை சார்பில் அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும் கொரோனா தடுப்பு முழு கவச உடை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 4 பேர் முழு பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில், மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை கொரோனா பாதித்தவர்கள் ஓட்டு போட வாய்ப்பு வழங்கியது. அதனால், சுகாதாரத்துறை சார்பில் அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும் கொரோனா தடுப்பு முழு கவச உடை உள்ளிட்ட அனைத்து வித பாதுகாப்பு நடைமுறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர் ஓட்டு போட விருப்பம் தெரிவித்தார். அதனையொட்டி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், மாவட்ட நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, மருத்துவ அலுவலர் ஜெகதீஷ்வரன் ஆகியோர் முன்னிலையில், தொற்று பாதித்த நபர் முழு கவச உடையுடன் 108 ஆம்புலன்சில், நேப்பால் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வார்டு 7-க்கான ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது, அங்கு பணியில் இருந்த தன்னார்வலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும் முழு உடல் கவச உடை அணிந்து பாதுகாப்புடன் பணிகளை மேற்கொண்டனர். இதேபோல், சின்னசேலத்தில் ஒருவரும், உளுந்துார்பேட்டையில் இருவர் என தொற்று பாதித்த 4 பேர் மட்டுமே மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று ஓட்டளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X