சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்'

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. சட்டசபை தேர்தலையொட்டி சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட 372 ஓட்டுச்சாவடி மையங்களிலும், நேற்று காலை 7 மணியளவில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 7 மணியளவில் ஓட்டுப்பதிவு முடிந்ததையடுத்து, ஓட்டுச்சாவடி முகவர்கள் முன்னிலையில், பதிவான மொத்த எண்ணிக்கை

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலையொட்டி சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட 372 ஓட்டுச்சாவடி மையங்களிலும், நேற்று காலை 7 மணியளவில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 7 மணியளவில் ஓட்டுப்பதிவு முடிந்ததையடுத்து, ஓட்டுச்சாவடி முகவர்கள் முன்னிலையில், பதிவான மொத்த எண்ணிக்கை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களான கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்களை பெட்டியில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டது. சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 116வது ஓட்டுச்சாவடியில், தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர் வள்ளி மற்றும் நிலைய அலுவலர்கள் இயந்திரங்களுக்கு 'சீல்' வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மண்டல அலுவலர்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன், மின்னணு ஓட்டுப்பதி இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X