வெறிச்சோடிய நகர வீதிகள் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெறிச்சோடிய நகர வீதிகள்

Added : ஏப் 07, 2021
Share
புதுச்சேரி : தேர்தல் காரணமாக புதுச்சேரியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, வியாபார நிறுவனங்கள், தொழிற் சாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பஸ்கள், டெம்போக்கள் இயங்கவில்லை. சினிமா தியேட்டர்கள் இயங்கவில்லை. இதனால் நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.

புதுச்சேரி : தேர்தல் காரணமாக புதுச்சேரியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, வியாபார நிறுவனங்கள், தொழிற் சாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பஸ்கள், டெம்போக்கள் இயங்கவில்லை. சினிமா தியேட்டர்கள் இயங்கவில்லை. இதனால் நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. பெரிய மார்க்கெட், உழவர்சந்தைகள் இயங்க வில்லை. கடைகள் மூடப்பட்டு, பஸ், டெம்போக்கள் ஏதும் இயங்காததால், கடையடைப்பு போல, சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. நகரப்பகுதி மட்டுமின்றி கிராமங்களிலும், கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X