பொது செய்தி

இந்தியா

ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு முடிந்து, போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'ஸ்டிராங் ரூம்'களில் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மொத்தம் 1677 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1558 கட்டுப்பாட்டு கருவிகள், 1558 வி.வி., பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.ஓட்டுப்பதிவு நேற்றிரவு இரவு 7 மணிக்கு

புதுச்சேரி : புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு முடிந்து, போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'ஸ்டிராங் ரூம்'களில் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மொத்தம் 1677 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1558 கட்டுப்பாட்டு கருவிகள், 1558 வி.வி., பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.ஓட்டுப்பதிவு நேற்றிரவு இரவு 7 மணிக்கு முடிந்தது. 30 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 1558 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப் பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

புதுச்சேரியில் லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, 9 தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 9 தொகுதிகளின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களும், தாகூர் அரசு கலைக் கல்லுாரியில் 5 தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.காரைக்கால் அண்ணா அரசு கல்லுாரியில், ஐந்து தொகுதிகளின் ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. மாகி தொகுதியின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஜவஹர்லால் நேரு அரசு மேனிலைப்பள்ளியிலும், ஏனாம் தொகுதியின் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஏனாம் சிவில் மையத்திலும் வைக்கப்பட்டன.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு உள்ளூர் போலீசார், ஐ.ஆர்.பி.என்., துணை ராணுவத்தினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X