சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணையில் இயந்திரம் பழுது: ஒன்றரை மணிநேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
விழுப்புரம் : காணை ஓட்டுச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக ஒன்றரை மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள 127வது ஓட்டுச்சாவடியில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்நிலையில், காலை 10:15 மணிக்கு மின்னணு

விழுப்புரம் : காணை ஓட்டுச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக ஒன்றரை மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள 127வது ஓட்டுச்சாவடியில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்நிலையில், காலை 10:15 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இயந்திரத்தில் பழுது சரி செய்ய முடியவில்லை. இதனால், ஒன்றரை மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

பின், புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக முதல் பெட்டியில் 186 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அந்த பெட்டி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது. இதேபோன்று, விழுப்புரம் அடுத்த வி.அகரம் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பழுது நீக்கி ஓட்டுப்பதிவு நடந்தது.மரக்காணம்திண்டிவனம் தொகுதி, ஆலத்துார் கிராமத்தில் உள்ள 195 வது ஓட்டுச் சாவடியில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், காலை 9.30 மணிக்கு திடீரென பழுதானது அதனை தொழில் நுட்ப குழுவினர் சரி செய்ததை தொடர்ந்து 10:30 மணிக்கு மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X