மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல தி.மு.க., எதிர்ப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தனியார் கல்லுாரி வாகனத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வில்லியனுார் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்து, சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு தனியார் கல்லுாரி பஸ்களில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.சுல்தான்பேட்டை

புதுச்சேரி : தனியார் கல்லுாரி வாகனத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியனுார் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்து, சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு தனியார் கல்லுாரி பஸ்களில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.சுல்தான்பேட்டை ஓட்டுச்சாவடியில் ஓட்டுகள் பதிவான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை இரவு 9 மணியளவில் தனியார் கல்லுாரி, பள்ளி பஸ்களில் ஏற்ற முயன்றனர். அதற்கு தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிடும் கட்சி பிரமுகர்களின் பஸ்களில் ஏற்றி செல்வதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.பி., ரங்கநாதன், 'இந்த பஸ்களை தேர்தல் துறை கையாள்கிறது. பஸ்சில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, பஸ் செல்லும் வழித்தடம் கண்காணிக்கப்படுகின்றது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்' என்றார். இதனை ஏற்று தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X