மீனவர்கள் கோஷ்டி மோதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் கோஷ்டி மோதல்

Added : ஏப் 07, 2021
Share
மரக்காணம் : மரக்காணம் அடுத்த கைப்பானிகுப்பத்தை சேர்ந்தவர்கள் சத்தியன்,48; மகேஷ்,50; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று பைக்கில் சென்ற மகேஷ் ஆதரவாளர் ரமேஷை, சத்தியன் தரப்பினர் வழிமறித்து தகராறு செய்தனர். அதனை அறிந்த ரமேஷின் தந்தை மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பிரச்னை குறித்து விசாரித்தார். அப்போது, சத்தியன் தரப்பினர் மூர்த்தியை தாக்கினர். அதனைத்

மரக்காணம் : மரக்காணம் அடுத்த கைப்பானிகுப்பத்தை சேர்ந்தவர்கள் சத்தியன்,48; மகேஷ்,50; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று பைக்கில் சென்ற மகேஷ் ஆதரவாளர் ரமேஷை, சத்தியன் தரப்பினர் வழிமறித்து தகராறு செய்தனர்.

அதனை அறிந்த ரமேஷின் தந்தை மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பிரச்னை குறித்து விசாரித்தார். அப்போது, சத்தியன் தரப்பினர் மூர்த்தியை தாக்கினர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதில், மகேஷ் தரப்பைச் சேர்ந்த மூர்த்தி, குணபால், கோவிந்து, தவனேஷ், நந்தகுமார், சத்தியன் தரப்பைச் சேர்ந்த பிச்சைமுத்து, வேலு, தனசேகர், சேகர், சீனுவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து, மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்த விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X