புதுச்சேரி : பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் உள்ள மாதிரி ஓட்டுச் சாவடியின் சிறப்பு அம்சங்கள் குறித்து டில்லி மெரிடியன் ஓட்டலில் தங்கியுள்ள பல நாட்டு பார்வையாளர்கள் காண நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின், சர்வதேச தேர்தல் வருகையாளர்கள் திட்டத்தின் கீழ், புதுச்சேரி மாநிலத்தின் உழவர்கரை சட்டசபை தொகுதிக்குள் அடங்கிய பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் உள்ள ஓட்டுசாவடிகள் மாதிரி ஓட்டுச் சாவடிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஓட்டுச் சாவடியில் செயல்படுத்தப்படும் நடைமுறைகள், நிகர் ஒளிபரப்பு மூலம் டில்லியில் உள்ள மெரிடியன் ஓட்டலில் தங்கியுள்ள பல நாட்டு பார்வையாளர்கள் காண நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்த ஓட்டுச்சாவடி மையத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் விளக்கினார்.
காணொளி கலந்துரையாடலில் மத்திய பொது தேர்தல் பார்வையாளர் மற்றும் உழவர்கரை தேர்தல் நடத்தும் அதிகாரி கலந்து கொண்டனர்.மாதிரி ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என தெரிந்து கொள்ள வாக்காளர் உதவி மையம், கையுறை, சானிடைசர் மற்றும் உடல் வெப்பநிலை அளவீடு செய்தல், வயதான மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கு உதவ, தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள் ஆகியவை சிறப்பு அம்சங்களாக இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE