செஞ்சி : செஞ்சி அருகே பழங்குடியினர் பகுதியை புறக்கணித்து வருவதால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மாதம்பூண்டி ஊராட்சியில் கிராமத்திற்கு வெளியே 250க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசிக்கின்றனர். இங்கு 126 ஓட்டு உள்ளது. இந்த கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து பழங்குடியினர் பகுதிக்கு எந்த ஒரு வளர்ச்சி பணியும் செய்யவில்லை.இதனால் விரக்தியடைந்த பழங்குடியினர் நேற்று தேர்தலை புறக்கணித்து அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசாரின் சமாதனாத்தை பொது மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து மாலை 4:00 மணிக்கு செஞ்சி தாசில்தார் ராஜன் பழங்குடியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
வருங்காலத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து பழங்குடியினர் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு ஓட்டு போட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE