அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., மிகப்பெரிய வெற்றி பெறும் ரவிக்குமார் எம்.பி., நம்பிக்கை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
வானுார் : ''மதச்சார்பற்ற கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்'' என ரவிக்குமார் எம்.பி., கூறினார். விழுப்புரம் தொகுதி எம்.பி., ரவிக்குமார், நேற்று வானுார் சட்டசபை தொகுதி மொரட்டாண்டி ஓட்டுச்சாவடியில், தனது மனைவி செண்பகவள்ளியுடன் வந்து ஓட்டு போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு

வானுார் : ''மதச்சார்பற்ற கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்'' என ரவிக்குமார் எம்.பி., கூறினார்.

விழுப்புரம் தொகுதி எம்.பி., ரவிக்குமார், நேற்று வானுார் சட்டசபை தொகுதி மொரட்டாண்டி ஓட்டுச்சாவடியில், தனது மனைவி செண்பகவள்ளியுடன் வந்து ஓட்டு போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் அலை வீசுகிறது. மதச்சார்பற்ற கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். அடுத்த முதல்வராக ஸ்டாலின் அமர உள்ளார். வானுார் தொகுதியில் வி.சி., கட்சி மிகப்பெரிய ஆதரவோடு வெற்றி பெற உள்ளது.ஐந்தாண்டுகளுக்கு மட்டும் நடக்கும் தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் தவறு செய்தாலும், 500 ஆண்டுகளுக்கு பின்னால் தமிழகத்தை இழுத்துச் சென்று விடுவார்கள் என்ற புரிதல் மக்களிடம் உள்ளது.

அதனால், தி.மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X