அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வெற்றி நடை போடுகிறது

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டிவனம் : ''தமிழகம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது, எங்கள் அணி நிச்சயமாக வெற்றி பெறும்'' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டு போட்ட பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு,

திண்டிவனம் : ''தமிழகம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது, எங்கள் அணி நிச்சயமாக வெற்றி பெறும்'' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டு போட்ட பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டர், நில அபகரிப்பு, பெண்களை சீண்டுதல் போன்ற பிரச்னைகள் மீண்டும் தலைதுாக்கக் கூடாது, விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைதியாக, மகிழ்ச்சியாக உள்ளனர். தமிழகம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்று கூறுவது கருத்துக் கணிப்பு இல்லை. கருத்து திணிப்பு. இது ஒரு தவறான முன்உதாரணம்.

தேர்தல் என்று அறிவிக்கின்றனரோ அன்றிலிருந்து கருத்துக் கணிப்பை வெளியிடக் கூடாது. தமிழகத்தில் 6.25 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்து கேட்கின்றனர். தொகுதிக்கு நுாறு பேரிடம் கருத்து கேட்டு, தமிழகத்தின் ஒட்டு மொத்த நிலை என்று சொல்வது அறிவியல் பூர்வமானது கிடையாது. இது கருத்து திணிப்புதான். எல்லா அரசியல் கட்சியும் ஊடகம் வைத்துள்ளனர். அவர்களுக்கேற்ப கருத்துக்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.மொத்த வாக்காளர்களில் .001 சதவீதத்தில் கருத்து கேட்டுவிட்டு, இதுதான் தமிழகத்தின் ஒட்டு மொத்த விருப்பம் என்று சொல்வது, என்னை பொறுத்தவரை முட்டாள்தனமான ஒன்று. 20 ஆண்டாக எவ்வித கருத்து கணிப்பும் சரியாக வரவில்லை. எல்லாம் தவறாக உள்ளது. எங்கள் அணி நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி பெறும்.இவ்வாறு அன்புமணி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan - Masurai,இந்தியா
07-ஏப்-202106:59:17 IST Report Abuse
Ganesan நம்பிக்கைதானே வாழ்க்கை. இம்முறை மக்கள் சிந்தித்து பெரிதளவு குறைகள் இல்லாத அதிமுக அரசுக்கு ஓட்டளித்திருப்பார்கள் என நம்புவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X