தமிழகத்தை பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர்

Added : ஏப் 07, 2021
Share
விருத்தாசலம் : ''ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர்'' என, அ.தி.மு.க., - தி.மு.க., மீது விருத்தாசலத்தில் பிரேமலதா குற்றம் சாட்டினார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை, விருகம்பாக்கத்தில் எனது ஓட்டை பதிவு செய்தேன்.

விருத்தாசலம் : ''ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர்'' என, அ.தி.மு.க., - தி.மு.க., மீது விருத்தாசலத்தில் பிரேமலதா குற்றம் சாட்டினார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை, விருகம்பாக்கத்தில் எனது ஓட்டை பதிவு செய்தேன். என் தொகுதிக்கு வந்து ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.வெயிலையும் பொருட்படுத்தாமல், மாற்றம் வர வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர். அந்த எழுச்சியை ஒவ்வொரு 'பூத்'திலும் பார்க்க முடிகிறது. ஆண்களை விட ஒவ்வொரு பூத்திலும் 20 ஓட்டுகள் பெண்கள் ஓட்டு அதிகம் உள்ளது. நிச்சயமாக விருத்தாசலத்தில் தே.மு.தி.க., அமோக வெற்றி பெறும்.அ.தி.மு.க., வாகனத்தில் 14 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பிடித்தபோது, அவர்கள் ஓடி விட்டனர்.

அந்த வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அ.தி.மு.க., - தி.மு.க., இதுபோல் பணம் பட்டுவாடா செய்து, மக்களை ஏமாற்றி, அரசியல் செய்து, தமிழகத்தை பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர். இவர்கள் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, ஓட்டுக்கு காசு கொடுத்து, வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X