பொது செய்தி

இந்தியா

முன்பதிவு செய்தால் மட்டுமே ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜிப்மர் மருத்துவமனையில், வரும் 9ம் தேதி முதல், மொபைல்போன் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே வெளிப்புற சிகிச்சை வழங்கப்படும்'' என ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கொரோனா தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

புதுச்சேரி : ''கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜிப்மர் மருத்துவமனையில், வரும் 9ம் தேதி முதல், மொபைல்போன் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே வெளிப்புற சிகிச்சை வழங்கப்படும்'' என ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கொரோனா தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், 9ம் தேதி முதல் அனைத்து மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன் பதிவு செய்து, தொலை மருத்துவ ஆலோசனைக்கு பிறகே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும். வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் பதிவு செய்ய வேண்டும். அனைத்து அவசர சிகிச்சைகளும், வழக்கம் போல் முன் பதிவின்றி தொடரும்.இதற்கான தொலைபேசி எண்கள் பற்றிய விவரங்களை www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் பெறலாம்.

பொது மக்கள் ஹலோ ஜிப்மர் எனப்படும் ஆண்ட்ராய்டு செயலி உதவியுடனும் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு, முன் பதிவு செய்யலாம்.முன் பதிவு செய்த நோயாளிகளிடம் தொலை பேசியில் ஒரு டாக்டர் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்து, தேவைப்படுவர்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருமாறு எஸ்.எம்.எஸ்.,அனுப்பி வைப்பார்.தினமும் ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர். வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முன் அனுமதிக்கான மொபைல் எஸ்.எம்.எஸ்.,உறுதி செய்த பிறகே மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவர். நோயாளியுடன் ஒரு நபர் மட்டுமே வரவேண்டும். கொரோனா தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க ஜிப்மர் மருத்துவமனையின் முயற்சிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X