பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்கனவே தபால் ஓட்டு போட்டாச்சு:

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தண்டையார்பேட்டை : ஓட்டு போடுவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்தவரின் ஓட்டு, ஏற்கனவே போடப்பட்டதாக கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பினார். சென்னை, தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், ரமேஷ். இவர், பக்ரைன் நாட்டில் வேலை செய்து வருகிறார். தேர்தலையொட்டி, சமீபத்தில் சென்னை திரும்பியுள்ளார்.தண்டையார்பேட்டை, தாண்டவராயன் தெருவில் உள்ள ஓட்டுச்சாவடியில்

தண்டையார்பேட்டை : ஓட்டு போடுவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்தவரின் ஓட்டு, ஏற்கனவே போடப்பட்டதாக கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

சென்னை, தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், ரமேஷ். இவர், பக்ரைன் நாட்டில் வேலை செய்து வருகிறார். தேர்தலையொட்டி, சமீபத்தில் சென்னை திரும்பியுள்ளார்.தண்டையார்பேட்டை, தாண்டவராயன் தெருவில் உள்ள ஓட்டுச்சாவடியில் நேற்று ஓட்டளிக்க சென்றார்.அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள், அவருக்கு ஏற்கனவே தபால் ஓட்டு போடப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம், 'நான் ஓட்டு போடவில்லை;

தபால் ஓட்டு போட விண்ணப்பிக்கவில்லை' என முறையிட்டும், தங்களால் எதுவும் செய்ய முடியாது என, அவர்கள் கைவிரித்து உள்ளனர்.ஜனநாயக கடமை ஆற்ற வெளிநாட்டில் இருந்து வந்தும், ஓட்டளிக்க முடியாமல் ரமேஷ் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X