சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாம்பரத்தில் வாக்குவாதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தாம்பரம் : சென்னை தாம்பரத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர்களின் மெத்தனத்தால், அ.தி.மு.க., -- தி.மு.க., வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஓட்டுப்பதிவில் தாமதமும் ஏற்பட்டது. சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கியது. தாம்பரம் தொகுதிக்குட்பட்ட, மேற்கு தாம்பரம், கஸ்துாரிபாய் நகரில் உள்ள, அவ்வை பள்ளியில், 24, 25,26 என, மூன்று பாகங்களுக்கான, ஓட்டுப்பதிவு துவங்கி

தாம்பரம் : சென்னை தாம்பரத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர்களின் மெத்தனத்தால், அ.தி.மு.க., -- தி.மு.க., வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஓட்டுப்பதிவில் தாமதமும் ஏற்பட்டது.

சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கியது. தாம்பரம் தொகுதிக்குட்பட்ட, மேற்கு தாம்பரம், கஸ்துாரிபாய் நகரில் உள்ள, அவ்வை பள்ளியில், 24, 25,26 என, மூன்று பாகங்களுக்கான, ஓட்டுப்பதிவு துவங்கி நடந்து வந்தது.இதில், பாகம் எண், 26ல், பணிபுரிந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஆரம்பம் முதலே, 'விவிபேட்' இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை எனக்கூறி, பணிகளில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

மை வைப்பது துவங்கி, அனைத்து பணிகளிலும், அ.தி.மு.க.,வினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாக, தி.மு.க.,வினர் குற்றம்சாட்டியதால், வாக்குவாதம் எழுந்தது.இதனால், ஒரு வாக்காளர், ஓட்டளித்து விட்டு வெளியே வர, 20 முதல் 25 நிமிடங்களுக்கு மேலானது. இது, வெளியே ஓட்டளிக்க காத்திருந்த, மற்ற வாக்காளர்களை அதிருப்தியடைய செய்தது.இதனால், 'அ.தி.மு.க., -- தி.மு.க.,வினரின் அரசியல் சண்டைகளை பார்க்க, நாங்கள் வரவில்லை, ஓட்டளிக்க வந்துள்ளோம்' என, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர். தகவலறிந்து போலீசார் வந்தபின், நிலைமை சீரானது. இப்பிரச்னைகளால் நான்கு மணிநேரம் ஓட்டுப்பதிவு, மந்தமாக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X