சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் மனநலவாசிகள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை : கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும், 84 பேர், நேற்று தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். சென்னை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவோரில், 84 பேர், சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றனர். இவர்கள், மற்றவர்களை போல், ஓட்டளிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு, காப்பக வளாகத்தில் பிரத்யேக ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சி

சென்னை : கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும், 84 பேர், நேற்று தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவோரில், 84 பேர், சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றனர். இவர்கள், மற்றவர்களை போல், ஓட்டளிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு, காப்பக வளாகத்தில் பிரத்யேக ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது போன்றவை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அதன் அடிப்படையில், அனைத்து வாக்காளர்களும் தாங்களாகவே ஓட்டுப்பதிவு செய்தனர்.இது குறித்து, மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ணா சந்திரிகா கூறியதாவது:காப்பகத்தில், 889 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில், புரிந்து கொள்ளும் தன்மையில் உள்ள, 88 பேரை தேர்ந்தெடுத்தோம்.அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில், 84 பேர் தகுதி பெற்றனர். அவர்கள் அனைவரும், வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களுக்கு ஓட்டுப்பதிவு செய்தனர். அதேபோல், காப்பகத்தில் பணியில் உள்ள, 10 பணியாளர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X