சென்னை : ஓட்டு போடுவதற்கு வசதியாக வழங்கப்படும், 'பூத் சிலிப்' முறையாக வழங்கப்படாததால், மூத்த குடிமக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால், ஓட்டுப்பதிவும் சற்று குறைந்தது.வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, வாக்காளரின் முகவரி, புகைப்படம், வரிசை எண், பாகம் எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, பூத் சிலிப் வழங்கப்படுவது வழக்கம். இதன் மூலம், வாக்காளர்கள் எளிதில் தாங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் குறித்த விபரங்களை அறிந்து, ஓட்டளித்தனர்.
இந்நிலையில், சென்னை, ஆலந்துார், சோழிங்கநல்லுார், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட தொகுதிகளில், பல இடங்களில், முறையாக பூத் சிலிப் வழங்கப்படவில்லை. பூத் சிலிப் இல்லாததால், தாங்கள் ஓட்டளிக்க வேண்டிய சரியான இடம் குறித்த தகவல் தெரியாமல், மூத்த குடிமக்கள் சிரமப்பட்டனர். அவர்கள், ஓட்டுச்சாவடியிலிருந்து, அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கட்சியினர் பூத் சிலிப் வழங்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலில் திரும்ப வர மனமின்றி, ஓட்டு போடாமல் பலர் திரும்பி சென்றனர். இதனால், இரண்டு தொகுதிகளிலும் ஓட்டு சதவீதம் சற்று குறைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE