சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறுகிய இடத்தில் ஓட்டுச்சாவடி ஊழியர்கள், முகவர்கள் அவதி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை : வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில், குறுகிய இடத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டதால், காற்றோட்டம் கிடைக்காமல், ஊழியர்கள், முகவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். வேளச்சேரி சட்டசபை தொகுதியில், கொரோனா பாதிப்பால், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 459 ஆக அதிகரிக்கப்பட்டன. அதிகபட்சமாக, வேளச்சேரி பிரிட்டோ பள்ளி வளாகத்தில், 19 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு

சென்னை : வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில், குறுகிய இடத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டதால், காற்றோட்டம் கிடைக்காமல், ஊழியர்கள், முகவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

வேளச்சேரி சட்டசபை தொகுதியில், கொரோனா பாதிப்பால், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 459 ஆக அதிகரிக்கப்பட்டன. அதிகபட்சமாக, வேளச்சேரி பிரிட்டோ பள்ளி வளாகத்தில், 19 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.இதில், தரை தளத்தில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், இரண்டு பேர் அமரக்கூடிய குறுகிய இடத்தில், ஓட்டுச்சாவடி செயல்பட்டது. அருகில் உள்ள மற்றொரு அறையில், இதர அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அமர்ந்திருந்தனர்.

வாக்காளர்கள், நெருக்கமாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காற்றோட்டம் கிடைக்கா ததால், ஊழியர்கள், முகவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.அதேபோல், சைதாப்பேட்டை தொகுதியில், வேளாங்கண்ணி கல்லுாரி வளாகத்தில், 20 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கும், தரைதளத்தில் போதிய இடவசதி இல்லாததால், வாக்காளர்கள், முகவர்கள், ஊழியர்கள் என அனைவரும் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X