சென்னை : சென்னையில் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதில், மாநகராட்சி கோட்டை விட்டு உள்ளது.
இதனால், ஓட்டுச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் அவதிக்குஉள்ளாயினர்.சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 1,061 இடங்களில், 4,911 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 'ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும், கை கழுவுவதற்கான தண்ணீர், கிருமி நாசினி, வெப்ப பரிசோதனை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன' என, மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தெரிவித்தார்.உத்தரவுமேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, சாய்வுதளம், சக்கர நாற்காலி, அவர்களுக்கு உதவி செய்ய, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். ஆனால், மாநகராட்சி ஏற்படுத்தியதாக கூறப்பட்ட வசதிகள், பெருமளவில் இல்லை.பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளுக்கான கட்டமைப்பு, நேற்று முன்தினம் தான் நடந்துள்ளது. அவசர கதியில் செய்யப்பட்ட பணிகளால், பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. பல ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் குடிநீர் இல்லாமல் தவித்தனர்.
அதேபோல், முதியோருக்கான சக்கர நாற்காலியும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட தன்னார்வலர்களும் இல்லை. கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட களப்பணியாளர்களும், சமூக இடைவெளியை ஒழுங்குப்படுத்தவில்லை. மேலும், ஓட்டுச்சாவடியில் இருந்து, 200 மீட்டர் தள்ளி, அரசியல் கட்சியினரின் தற்காலிக பிரசார அலுவலகம் அமைக்க உத்தரவிடப்பட்டது. ஆட்கள் இல்லைஅதில், ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும், இரண்டு பேர் மட்டுமே அனுமதி என்ற நிலையில், ஐந்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர்.
அவர்களை கண்காணித்து ஒழுங்குப்படுத்துவதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தவறி விட்டனர். பல இடங்களில், ஓட்டுச்சாவடி வரை, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.இது குறித்து, முதியவர் ஒருவர் கூறியதாவது:ஓட்டுச்சாவடிக்கு செல்வதற்காக தேர்தல் ஆணையத்தின், '1950' என்ற உதவி மைய எண்ணையும், மாநகராட்சியின், '1913' என்ற உதவி மைய எண்ணையும் தொடர்பு கொண்டேன். இரண்டு தரப்பிலும் இருந்தும் முறையான பதில் இல்லை.நேரடியாக ஓட்டுச்சாவடிக்கு சென்ற போது, முதியவர்களுக்கான கட்டமைப்பு இல்லாத நிலையே இருந்தது. உதவி செய்வதற்கும் ஆட்கள் இல்லை.சக்கர நாற்காலி எங்கே இருக்கிறது எனவும் தெரியவில்லை. இதனால், ஓட்டளிக்க முடியாமல் தவித்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE