பொது செய்தி

தமிழ்நாடு

படகில் சென்று ஓட்டு போட்ட 250 வாக்காளர்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பழவேற்காடு : சாலை வழியாக சென்றால், 7 கி.மீ., செல்ல வேண்டும் என்பதால், படகில், பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, இரண்டு கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர். பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் ஆகிய இரண்டு கிராமங்களில், 250 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓட்டுப்பதிவு மையம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோரைகுப்பம்

பழவேற்காடு : சாலை வழியாக சென்றால், 7 கி.மீ., செல்ல வேண்டும் என்பதால், படகில், பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, இரண்டு கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர்.

பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் ஆகிய இரண்டு கிராமங்களில், 250 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓட்டுப்பதிவு மையம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோரைகுப்பம் கிராமத்தில் உள்ளது.தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் கிராமங்களுக்கும், கோரைகுப்பம் கிராமத்திற்கும் இடையே, 500 மீட்டர் அகலத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது.தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் கிராமவாசிகள் ஓட்டு போடுவதற்காக கோரைகுப்பத்திற்கு சாலை வழியாக செல்ல வேண்டுமானால், 7 கி.மீ., பயணிக்க வேண்டும்.

பஸ், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வசதியில்லாததால், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள், பக்கிங்ஹாம் கால்வாயை படகில் கடந்து சென்று கோரைகுப்பத்தில் ஓட்டு போட்டு திரும்பினர்.ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், இந்த சிரமம் நீடிப்பதால், தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் ஓட்டுப்பதிவு மையம் அமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X