மனைவியை கத்தியால் குத்திய கணவர் போலீசில் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கத்தியால் குத்திய கணவர் போலீசில் சரண்

Added : ஏப் 07, 2021
Share
கோயம்பேடு : குடும்ப தகராறில், மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவர், போலீசில் சரண் அடைந்தார். நெற்குன்றம், சி.டி.என். நகரைச் சேர்ந்தவர் சிவா, 57; அவரது மனைவி மகாலட்சுமி, 52. நேற்று காலை, கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் சிவா, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்றார். குடும்ப தகராறில் தன் மனைவியை குத்தியதாகவும், தன்னை கைது செய்யும்படியும் கூறினார்.சம்பவ இடத்திற்கு

கோயம்பேடு : குடும்ப தகராறில், மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவர், போலீசில் சரண் அடைந்தார்.

நெற்குன்றம், சி.டி.என். நகரைச் சேர்ந்தவர் சிவா, 57; அவரது மனைவி மகாலட்சுமி, 52. நேற்று காலை, கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் சிவா, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்றார். குடும்ப தகராறில் தன் மனைவியை குத்தியதாகவும், தன்னை கைது செய்யும்படியும் கூறினார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, அவரது கணவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X