சென்னை : சென்னையில், பல்வேறு காரணத்தால், வீடுதோறும் வழங்க வேண்டிய பூத் சிலிப், ஓட்டுச்சாவடிகளில் வழங்கப்பட்டது.
கூட்டம் அதிகரித்து, சமூக இடைவெளி கடைப்பிடிக்காததால், கொரோனா பரவல் அச்சம் நிலவியது.தேர்தல் கமிஷன் சார்பில், வாக்காளர்களுக்கு, �பூத் சிலிப்' என்ற, வாக்காளர் உறுதி சீட்டு வழங்கப்படும். முன்பு, கட்சியினர் வீடு தோறும் வழங்கினர்.இதில், விதிமீறல் ஏற்பட்டதால், பூத் சிலிப்பை, தேர்தல் கமிஷனே வழங்கும் என, அறிவிக்கப்பட்டது. சென்னையில், இதற்காக மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.கொரோனா தடுப்பு பணி மற்றும் ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு போன்ற காரணத்தால், பெரும்பாலான பகுதிகளில், வீடு தோறும், பூத் சிலிப் வழங்கப்படவில்லை.இதனால், வாக்காளர்கள், பூத் சிலிப் இல்லாமல், ஓட்டுச்சாவடிகளுக்கு சென்றனர். ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரித்ததால், பாகம் எண் மாறியது.அவை, பூத் சிலிப்பில் தான் தெரியும். மாநகராட்சி ஊழியர்கள், ஓட்டுச்சாவடி முன் அமர்ந்து, பூத் சிலிப் வழங்கினர். கூட்டம் அதிகரித்ததால், பூத் சிலிப் வழங்கும் பணியில், காலதாமதம் ஏற்பட்டது.மேலும், சமூக இடைவெளி இல்லாமல், கூட்டமாக நின்றதால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதை, ஒழுங்குப்படுத்த போதிய ஊழியர்கள் இல்லாதது, வேதனைஅளிப்பதாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE