திருத்தணி : ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் இயந்திரங்கள் அடிக்கடி பழுதானதால் வாக்காளர்கள், ஒன்றரை மணி நேரம் வரை காத்திருந்து ஓட்டளித்தனர்.
திருத்தணி சட்டசபை தொகுதியில், நேற்று, காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம், 399 ஓட்டுச்சாவடிகளில், 30க்கும் மேற்பட்ட ஓட்டுச் சாவடிகளில் இயந்திரங்கள் அடிக்கடி பழுதானதால் வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டுளித்தனர். தாமதம்குறிப்பாக, திருத்தணி ஒன்றியம் அகூர் சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியில், பெண் ஓட்டுச்சாவடியில் காலை, 7:00 மணிக்கு துவங்கும் போதே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அரை மணி நேரம் பின், இயந்திரம் சீரமைத்தபின் ஓட்டுப்பதிவு துவங்கியது. காலை, 11:30 மணிக்கு மீண்டும் இயந்திரம் பழுதானது. மதியம், 1:00 மணிக்கு பின் இயந்திரம் சீரமைத்த பின், மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
இதனால் அந்த ஓட்டுச்சாவடியில், ஒன்றரை மணி நேரம் வாக்காளர்கள் அந்த மையத்திலேயே உட்கார்ந்து இருந்தனர்.திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் இரு ஓட்டுச்சாவடிகளில் அரசியல் கட்சி முகவர்கள் காலை, 7:30 மணிக்கு வந்தனர். இதனால் அங்கு, அரை மணி நேரம் காலதாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.மாதிரி மையம்பீரகுப்பம் மற்றும் எஸ்.அக்ரஹாரம் ஆகிய இரு ஓட்டுச்சாவடியில், மாதிரி ஓட்டுச்சாவடி அமைத்து, வாக்காளர்களை திருமணத்திற்கு அழைப்பது போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டியும் அலங்கரிக்கப்பட்டது. இதுதவிர, வாக்காளர்கள் ஓட்டு போட்டவுடன் 'செல்பி' எடுப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. இது வாக்காளர்களை மிகவும் கவர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE