பொன்னேரி : பழவேற்காடு மீனவ பகுதிகளில், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து, ஆர்வத்துடன் சென்று ஓட்டு போட்டனர்.
பொன்னேரி சட்டசபை தொகுதியில், 370 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு நேற்று, காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. பெரவள்ளூர் கிராமத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால், ஒரு மணி நேரம் தாமதத்துடன் ஓட்டுப்பதிவு துவங்கியது.அனுப்பம்பட்டு, மீஞ்சூர், நாலுார் கம்மார்பாளையம் ஆகிய பகுதிகளில், இயந்திரம் பழுது, 'விவிபேடில் சின்னம் தெரியாதது உள்ளிட்ட காரணங்களால், அங்கு, 20 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதித்தது.பழவேற்காடு மீனவ கிராமங்களில், மீனவர்கள் ஆர்வமுடன் சென்று ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவிற்காக கிராம கூட்டங்கள் கூட்டி அனைவரும் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால், அவர்களது மீன்பிடி படகுகள் பழவேற்காடு ஏரிக்கரைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.நேற்று மாலை, 3:00 மணி நிலவரப்படி, 48 சதவீதம் ஓட்டுகள் பாதிவாகி இருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE