பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டளிக்க மறுப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பள்ளிப்பட்டு : தமிழக இளைஞர்கள், ஆந்திர மாநிலத்தில் விபத்தில் சிக்கி இறந்ததால், சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர் நேற்று ஓட்டளிக்க மறுத்தனர்.அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதனால், ஒன்றரை மணி நேரம் தாமதமாக ஓட்டு பதிவு துவங்கியது.பள்ளிப்பட்டு அடுத்த, ஈச்சம்பாடி காலனியை சேர்ந்தவர்கள் சம்பத்குமார், 26, கிஷோர், 24. இவர்கள், நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம், சித்துார்

பள்ளிப்பட்டு : தமிழக இளைஞர்கள், ஆந்திர மாநிலத்தில் விபத்தில் சிக்கி இறந்ததால், சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர் நேற்று ஓட்டளிக்க மறுத்தனர்.அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதனால், ஒன்றரை மணி நேரம் தாமதமாக ஓட்டு பதிவு துவங்கியது.பள்ளிப்பட்டு அடுத்த, ஈச்சம்பாடி காலனியை சேர்ந்தவர்கள் சம்பத்குமார், 26, கிஷோர், 24. இவர்கள், நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், எஸ்.ஆர்.புரம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர்.

பின், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். எஸ்.ஆர்.புரம் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.இதனால், ஈச்சம்பாடி கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினர். நேற்று காலை ஓட்டளிக்க மறுத்து, கிராமத்தினர் யாரும் ஓட்டுச்சாவடிக்கு வரவில்லை.இதையடுத்து, பள்ளிப்பட்டு போலீசார், கிராமத்தினரை சமரசம் செய்தனர். சமரசத்திற்கு பின், ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை, 8:30 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X