l பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, காக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பூத் எண்:96ல், தீனதயாளன், 64, என்பவர் ஓட்டு அளிக்க வந்தார். அப்போது, அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதே சமயம், சில ஆண்டுகளுக்கு முன் இறந்த அவரது மனைவியின் பெயர் மட்டும், வாக்காளர் பட்டியலில் இருந்ததால், அதிருப்தியடைந்து, ஓட்டுச் சாவடி அலுவலர்களிடம் முறையிட்டும், எவ்வித பலனும் இல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
பூண்டி ஒன்றியம், சென்றாயன்பாளையம் கிராமத்தில், மேட்டுப்பாளையம், பப்பிரெட்டி கண்டிகை உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள், டிராக்டர், மினி வேன்களில், 4 கி.மீட்டர் முதல், 10 கி.மீட்டர் துாரம் பயணித்து வந்து ஓட்டு போட்டனர்.l கடம்பத்துார் ஒன்றியம், சத்தரையில், வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க.,வினர் பரிசு டோக்கன் வழங்கியதை, காவல் துறையினர் தடுக்கவில்லை எனக்கூறி, தி.மு.க.,வினர் மப்பேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். l பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு ஓட்டுச்சாவடியில், ஓட்டு இயந்திரம் பழுதால், ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது.
திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட, 57 பேர், தேர்தலில்ஓட்டளித்தனர்.l கும்மிடிப்பூண்டி அருகே, ஈகுவார்பாளையம் கிராமத்தில், மூன்று ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள ஊராட்சிஒன்றிய தொடக்க பள்ளி முன்,தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த கட்சியினர் இடையே, மாலை, 3:00 மணிக்கு மேல், தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களை கலைத்து அனுப்பினர். அதன்பின், இரு தரப்பிலும், 80க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த போலீசார், அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE