புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும் என பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.,) கணித்திருக்கிறது.
விரைவில் நடைபெறவிருக்கும் உலக வங்கியின் வருடாந்திர மாநாட்டையொட்டி, ஐ.எம்.எப்., அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22 நிதியாண்டில் 12.5 சதவீதம் அதிகரிக்கும். அடுத்த நிதியாண்டில் அது 6.9 சதவீதமாக அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில், சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் ஐ.எம்.எப்., வெளியிட்டிருந்த அறிக்கையில், 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என கூறியிருந்த நிலையில், தற்போது அதனை உயர்த்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.