நக்சல் பிடியில் சிஆர்பிஎப் வீரர்: பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
ராய்ப்பூர் : சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தங்கள் பிடியில் உள்ளதாகவும், அவரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச தயாராக உள்ளதாக நக்சல்கள் தெரிவித்துள்ளனர்.சத்தீஸ்கரில், பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் சமீபத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போஸீஸ் படையினர் அடங்கிய கூட்டுப் படையினர், நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது,
சத்தீஸ்கர், நக்சல்கள், சிஆர்பிஎப், வீரர், மத்திய அரசு, பேச்சுவார்த்தை,

ராய்ப்பூர் : சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தங்கள் பிடியில் உள்ளதாகவும், அவரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச தயாராக உள்ளதாக நக்சல்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கரில், பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் சமீபத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போஸீஸ் படையினர் அடங்கிய கூட்டுப் படையினர், நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் என்ற வீரரை காணவில்லை. அவர், நக்சல்கள் பிடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அவரை போலீசார் தேடி வந்தனர்.


latest tamil news




இந்நிலையில் நக்சல்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பீஜாப்பூர் தாக்குதலில் 24 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் காயமடைந்தனர். ஒரு வீரர் எங்களது பிடியில் உள்ளார். இந்த சம்பவத்தில் 4 நக்சல்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசுடன் பேசுவதற்கு தயாராக உள்ளோம். இதற்காக மத்தியஸ்தர்களை அரசு நியமிக்க வேண்டும். எங்கள் பிடியில் உள்ள வீரரை விடுவிக்க தயார். போலீசார் எங்கள் எதிரிகள் அல்ல. இவ்வாறு அவர்கள் கூறியுள்னர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
07-ஏப்-202116:36:14 IST Report Abuse
elakkumanan வெளிநாட்டு காசுக்கு இங்கே வாலாட்டும் கும்பல் இருக்கும்வரை , இதுபோன்ற சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும்.....எங்க ஊரில், ஒரு காலத்தில், வீரப்பன் என்ற (ஐயோ, வீரப்பர் ...கழக குஞ்சுகள் கோச்சுப்பாங்க.. அவங்க தலை ...தமிழ் வாச்மன் சட்டசபையிலேயே அப்படித்தான் சொல்ல சொல்லியிருக்கார்... வீரப்பர், தமிழ் தீவிரவாதியாம்..இந்த வரலாற்று கேவலமெல்லாம் தெரியாத பெயரில்லா சம்பள ஊழியர்களுக்கு ஒரு ரெபெரென்ஸ் க்கு சொன்னேன் ) மகான், வாராவாரம், ஒரு தியாகி (பத்திரிக்கை ஆசிரியர் என்றும் சொல்லலாம்) மூலமா ஆடியோ வெளியீட்டு விழாவே நடத்தியது வரலாறு....எங்கெல்லாம், வெளிநாட்டுக்கு காட்டிக்கொடுக்கும் கும்பல் இருக்கிறதோ, அங்கெல்லாம், தேச விரோதம் சீரும் சிறப்புமாக வளரும்..வளர்க்கப்படும்.............
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-ஏப்-202116:19:02 IST Report Abuse
ஜெயந்தன் பிஜேபி அரசின் கையாலாகாத்தனத்தை பற்றி பேசியவர்கள் எல்லாம் அர்பன் நக்சல் என்று முத்திரை குத்துவதிலேயே குறியாக இருந்தார்கள்... ஆனால் உண்மையான நிஜ நக்சல்களிடம் கோட்டை விட்டு விட்டார்கள்..இதனால் அப்பாவி ராணுவ வீரர்கள் தான் பலியாகி இருக்கிறார்கள்.... நெஞ்சம் விம்முகிறது அவர்களை நினைத்து.....இந்த அரசு ஒரூ காகிதப் புலி தானோ ...
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
07-ஏப்-202113:55:46 IST Report Abuse
Murthy நக்சல்கள் யார் என்று முழுமையாக தெரிந்துகொண்டால்தான் தீர்வு கிடைக்கும்.....ஆயுதம் இரண்டு தரப்புக்கும் தீர்வை கொடுக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X