அரசியல் செய்தி

தமிழ்நாடு

"பல திறமைகள் வைத்திருப்பதால் தான் உங்களை ஆயிரம் விளக்கில் போட்டியிட பாஜ தேர்வு செய்ததோ..."

Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
எனக்கு எந்த ஒரு விஷயத்துக்குமே பயம் கிடையாது. 16 வயசுல சென்னைக்கு வந்தேன். இந்த ஊர்ல யாரையும் முன்ன பின்ன தெரியாது; சொந்த வீடு கிடையாது; மொழி தெரியாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்பி இங்க வந்து ஜெயிச்சுக் காட்டியிருக்கேன். ஒவ்வொரு கட்டத்துலயும் பிரச்னைகள் வரும்போதும், தனி ஒருத்தியா தான் போராடி சமாளிச்சிருக்கேன்.-நடிகை குஷ்பு 'இப்படி பல திறமைகளை

எனக்கு எந்த ஒரு விஷயத்துக்குமே பயம் கிடையாது. 16 வயசுல சென்னைக்கு வந்தேன். இந்த ஊர்ல யாரையும் முன்ன பின்ன தெரியாது; சொந்த வீடு கிடையாது; மொழி தெரியாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்பி இங்க வந்து ஜெயிச்சுக் காட்டியிருக்கேன். ஒவ்வொரு கட்டத்துலயும் பிரச்னைகள் வரும்போதும், தனி ஒருத்தியா தான் போராடி சமாளிச்சிருக்கேன்.-நடிகை குஷ்பு



latest tamil news



'இப்படி பல திறமைகளை வைத்திருப்பதால் தான், ஆயிரம் விளக்கில் போட்டியிட, பா.ஜ., உங்களை தேர்ந்தெடுத்ததோ' என, கேட்கத் தோன்றும் வகையில், நடிகை குஷ்பு பேட்டி



அ.தி.மு.க., பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. பணபலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. பணத்தை நம்பி, நாங்கள் களத்தில் நிற்கவில்லை.-மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில பொதுச் செயலர் பாலகிருஷ்ணன்


'வெற்றி பெற்று, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பது தான், உங்கள் விருப்பம் என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்தது தானே; கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி



சித்தி சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத் தான். சிறையில் அவர் இருந்தபோதும் சரி, வெளியே வந்த பிறகும் சரி, எனக்கு அவர் ஆதரவாகத் தான் இருக்கிறார். அவர் தற்காலிகமாக அரசியலிலிருந்து ஒதுங்கித் தான் இருக்கிறார்; அரசியலை விட்டு விலகவில்லை.அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


latest tamil news




'தேர்தல் முடிவுக்கு பின், களத்தில் இறங்குவார்; இப்போதைய பதுங்கல், 'பிரிபிளான்' தான் என, சில தகவல்கள் தெரிவிக்கின்றனவே...' என, கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி



கருணாநிதி இப்போது இல்லை என்பது மனதை வாட்டும் வருத்தமே. ஆனால், நான் அரசியல் பொது வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த நாள்தொட்டு, அவர் வழிகாட்டுதலில் தொடர்ந்து வளர்ந்தவன். அவர் இருந்திருந்தால் ஒவ்வொன்றையும் இப்படி செய்திருப்பார் என்று எண்ணி பார்த்து, எச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.-தி.மு.க., தலைவர் ஸ்டாலின்


latest tamil news




'உங்களுக்கு தந்தையாக கருணாநிதி வாய்த்தது போல; கருணாநிதிக்கு நீங்கள் மகனாக வாய்த்தது போல எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேட்டி



ஜெ., ஆசையே, எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது தான். நாங்க, ஜாதி, மதம் எதையும் பார்க்கிறதில்லை. இது கூட, ஜெ., வழி தான். ஜெ., ஆட்சி அமைந்த தனித்தன்மையில் தான் நாங்க தொடர்ந்து போறோம். உரிமைகளைக் கேட்டுப் பெறுகிறோம். அதில் எந்த சமரசமும் இல்லை.-துணை முதல்வர் பன்னீர்செல்வம்


'ஜெ., விருப்பப்படியே செயல்படுகிறீர்கள் என்பது தெளிவாகிறது. ஜெ., மாதிரி செயல்பட்டு விடாதீர்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-ஏப்-202103:43:07 IST Report Abuse
Matt P சித்தி சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத் தான்....சித்தி, குடும்பத்துக்காக உழைத்து சிறைக்கு சென்று வந்த பிறகும் கூட இன்றும் குடும்பத்துக்காக வாழ்கிறார்.அக்கா பிள்ளையை வூட்டி வளர்த்தால் அடுத்தவன் பிள்ளை தானே வளரும்னு ஒரு தத்துவம் போலிருக்கு. பாசக்கார சித்தி.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-ஏப்-202103:37:22 IST Report Abuse
Matt P 16 வயசுல சென்னைக்கு வந்தேன். இந்த ஊர்ல யாரையும் முன்ன பின்ன தெரியாது அதுவும் அந்த பதினாறு வயதிலே. அதுவும் ஒரு இளம் பெண்ணாக தனி மநிதியாக பல சோதனைகளை மேற்கொண்டு சாதித்த பெண்மணியாக இன்றைக்கு வளர்ந்திருக்கிறார். பாராட்டுக்குரியவர்.தனிமனிதியாகும் நிலைய ஏற்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்க கூடாது அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால் வாழ்க்இ முடிந்து விடவில்லை. அதை பாதுகாப்போடு சமாளித்து கட்டுப்பாடோடு முன்னேரம் வழியை பார்க்க வேண்டும். குஷ்புவின் கட்டுப்பாடு அளவு தெரியாது.பரந்த மனப்பான்மை உள்ளவர் என்று சொல்லலாம்.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
07-ஏப்-202116:35:55 IST Report Abuse
Ramalingam Shanmugam அ.தி.மு.க., பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது இப்படியெல்லாம் 25c உண்டியல் பார்ட்டிகள் பேசக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X