பொது செய்தி

தமிழ்நாடு

'வாக்குறுதி, அறிக்கைகளை பார்த்து ஓட்டு போட்டோம்'

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, புங்கம்பாடி ஓட்டுச்சாவடியில் சாணார்பாளையத்தை சேர்ந்த பி.மோகன், 20, முதல் ஓட்டை பதிவு செய்து கூறியதாவது: எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கிறேன். கட்சிகளின் செயல்பாடு, அவர்களது தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் போன்றவற்றை கவனித்து, ஓட்டுப்போட்டுள்ளேன், என்றார். இதே பூத்தில் முதல் ஓட்டு போட்ட, வெள்ளோடு மேட்டுபாளையத்தை சேர்ந்த டி.மேகனபிரியா, 19, கூறுகையில்,

ஈரோடு: ஈரோடு, புங்கம்பாடி ஓட்டுச்சாவடியில் சாணார்பாளையத்தை சேர்ந்த பி.மோகன், 20, முதல் ஓட்டை பதிவு செய்து கூறியதாவது: எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கிறேன். கட்சிகளின் செயல்பாடு, அவர்களது தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் போன்றவற்றை கவனித்து, ஓட்டுப்போட்டுள்ளேன், என்றார். இதே பூத்தில் முதல் ஓட்டு போட்ட, வெள்ளோடு மேட்டுபாளையத்தை சேர்ந்த டி.மேகனபிரியா, 19, கூறுகையில், ''பி.காம்., படிக்கிறேன். அரசியல் பற்றி தெரியாது என்றாலும், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை வைத்து ஓட்டு போட்டுள்ளேன்,'' என்றார். அரச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் ஓட்டை பதிவு செய்த, நாச்சிவலசு டி.சூரியா, 19, கூறுகையில், ''பி.எஸ்சி., விலங்கியல் படிக்கிறேன். வாக்குறுதி அளித்தவர்களை தேர்வு செய்யும் வகையில் ஓட்டுப்பதிவு செய்துள்ளேன்,'' என்றார். இதே பூத்தில், முதல் ஓட்டை பதிவு செய்த, டி.சுபாஷ், 20, கூறுகையில், 'வெல்டிங் தொழில் செய்கிறேன். எனக்கு பிடித்த அம்சம் உள்ள வேட்பாளருக்கு ஓட்டு போட்டேன். மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார். எப்போதையும் விட, இம்முறை, இளம் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்ததை காண முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X