பொது செய்தி

தமிழ்நாடு

இயந்திரங்களை மாற்றி வைத்ததாக தோப்பு வெங்கடாசலம் தர்ணா

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பெருந்துறை: இயந்திரங்களை மாற்றி வைத்ததாக கூறி, சுயேச்சை வேட்பாளர், ஓட்டுச்சாவடியில் தர்ணாவில் ஈடுபட்டதால், பெருந்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. பெருந்துறை தொகுதியில், 25 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டது. தொகுதியின், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம், அ.தி.மு.க.,வில் வாய்ப்பு தராததால்,

பெருந்துறை: இயந்திரங்களை மாற்றி வைத்ததாக கூறி, சுயேச்சை வேட்பாளர், ஓட்டுச்சாவடியில் தர்ணாவில் ஈடுபட்டதால், பெருந்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. பெருந்துறை தொகுதியில், 25 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டது. தொகுதியின், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம், அ.தி.மு.க.,வில் வாய்ப்பு தராததால், தென்னந்தோப்பு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவரது சின்னம், இரண்டாவது இயந்திரத்தில் இரண்டாவது சின்னமாக உள்ளது. இதை பிரசாரத்திலும் தெரிவித்து வந்தார். இந்நிலையில், பொன்முடி ஊராட்சி ஆரம்ப பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, தோப்பு வெங்கடாச்சலம் நேற்று சென்றார். அங்கு முதல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை இரண்டாவதாகவும், இரண்டாவது இயந்திரத்தை முதலாவதாகவும் வைத்திருந்தனர். இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைவார்கள்; தேர்தல் விதிக்கு புறம்பானது, என்று குற்றம் சாட்டினார். இதுபோல், 30க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாடியில் இயந்திரம் மாற்றி வைத்துள்ளதாக புகார் கூறியும், அதிகாரிகள் மாற்றவில்லை. இதை கண்டித்து, அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து சென்ற தேர்தல் அதிகாரிகள், தோப்பு வெங்கடாசலம் கூறிய குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து, இயந்திரங்களை மாற்றி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X