பொது செய்தி

தமிழ்நாடு

பாட்டியை அழைத்து வருவதில் தகராறு; 15 நிமிடம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
வீரபாண்டி: சக்கர நாற்காலியில், ஒரு பாட்டியை, ஓட்டுச்சாவடிக்குள் அழைத்து வருவதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியதால், 15 நிமிடம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.வீரபாண்டி தொகுதி, ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, நேற்று மதியம், 3:25 மணிக்கு, நடக்க முடியாத

வீரபாண்டி: சக்கர நாற்காலியில், ஒரு பாட்டியை, ஓட்டுச்சாவடிக்குள் அழைத்து வருவதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியதால், 15 நிமிடம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
வீரபாண்டி தொகுதி, ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, நேற்று மதியம், 3:25 மணிக்கு, நடக்க முடியாத லட்சுமி, 70, என்பவரை, உறவினர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, ஓட்டுப்போட அழைத்து வந்தனர். ஓட்டுச்சாவடிக்குள் செல்ல, சக்கர நாற்காலியை தேடியபோது, தள்ளி செல்லும் துப்புரவு பணியாளர்கள், உணவு அருந்த சென்றதாக, அங்கிருந்தவர்கள் கூறினர். இதனால், அங்கிருந்த அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், சக்கர நாற்காலியை எடுத்து வந்து லட்சுமியை அழைத்துச்செல்ல முயன்றார். இதைப்பார்த்த தி.மு.க.,வினர், 'நீங்கள் எப்படி அழைத்துச்செல்லலாம்' எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, தி.மு.க., - அ.தி.மு.க., தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதால், பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ படையினர், போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஓட்டுச்சாவடியில் கூச்சல் ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்குள், இரு கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள், சம்பவ இடத்துக்கு வந்து, தங்கள் கட்சி தொண்டர்களை சமாதானப்படுத்தினர். ஊரக டி.எஸ்.பி., உமாசங்கர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் வந்து, தகராறில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். 15 நிமிடத்துக்கு பின், மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X