பொது செய்தி

தமிழ்நாடு

இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு; ஓட்டுப்பதிவு தொடங்குவதில் தாமதம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் தொகுதி, மேச்சேரி அருகே, மங்கானூர், வைத்தியநாதபுரம் ஓட்டுச்சாவடிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், ஓட்டுப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், கோளாறு சரி செய்யப்பட்டு, மங்கானூரில், 8:00 மணிக்கு பின்பும், வைத்தியநாதபுரத்தில், 9:30 மணிக்கு பின்பும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதேபோல், ஏற்காடு தொகுதி, நாசரேத்

மேட்டூர்: மேட்டூர் தொகுதி, மேச்சேரி அருகே, மங்கானூர், வைத்தியநாதபுரம் ஓட்டுச்சாவடிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், ஓட்டுப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், கோளாறு சரி செய்யப்பட்டு, மங்கானூரில், 8:00 மணிக்கு பின்பும், வைத்தியநாதபுரத்தில், 9:30 மணிக்கு பின்பும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதேபோல், ஏற்காடு தொகுதி, நாசரேத் பெண்கள் மேல்நிலை பள்ளி ஓட்டுச்சாவடியில், நேற்று காலை, 9:30 மணிக்கு, விவிபேடு இயந்திரம் பழுதானதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பின், பணியாளர்கள் இயந்திரத்தை சரிசெய்ததையடுத்து, 10:30 மணிக்கு, மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.


வேட்பாளர்: சேலம் வடக்கு தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கடாஜலம் ஓட்டுப்போட, பழைய சூரமங்கலம், ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, நேற்று வந்தார். அப்போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதிகாரிகள் இயந்திரத்தை சரிசெய்த பின், மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. பின், வெங்கடாஜலம் ஓட்டை பதிவு செய்தார்.

5 ஓட்டுச்சாவடி: கெங்கவல்லி சட்டசபை தொகுதி, இலுப்பநத்தம் ஓட்டுச்சாவடியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேடு பழுதாகின. ஒரு மணி நேரத்துக்கு பின், வேறு இயந்திரங்கள் மாற்றி கொடுக்கப்பட்டன. அதேபோல், சிறுவாச்சூர், கூடமலை, சார்வாய், பட்டுத்துறை பகுதிகளில் உள்ள, ஐந்து ஓட்டுச்சாவடிகளில் விவிபேடு பழுதானது. இதனால், ஒரு மணி முதல், ஒன்றரை மணி நேரம் வரை, ஓட்டுப்பதிவுகள் தாமதமாகின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X