பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்போட பயன்படுத்திய கையுறை: திறந்தவெளியில் வீசிய வாக்காளர்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளியை பின்பற்றி, வரிசையில் நின்று ஓட்டுப்போட அறிவுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், 4,280 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான, தெர்மல் ஸ்கேனர், கிருமி நாசினி, தேர்தல் பணியாளர்களுக்கு, முக பாதுகாப்பு கவசம், முக கவசம், வாக்காளர்களுக்கு வழங்க முக கவசம், கையுறைகள் ஆகியன, தனித்தனியே, ஒதுக்கீடு செய்து

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளியை பின்பற்றி, வரிசையில் நின்று ஓட்டுப்போட அறிவுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், 4,280 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான, தெர்மல் ஸ்கேனர், கிருமி நாசினி, தேர்தல் பணியாளர்களுக்கு, முக பாதுகாப்பு கவசம், முக கவசம், வாக்காளர்களுக்கு வழங்க முக கவசம், கையுறைகள் ஆகியன, தனித்தனியே, ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டன. நேற்று, சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவின்போது, முக கவசம் அணியாமல் வந்த வாக்காளர்களுக்கு வழங்கி, அவரது உடல் நிலை பரிசோதனைக்கு பின், கிருமி நாசினி, கையுறை வழங்கி, ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுப்போட்ட பின், ஒருமுறை பயன்படும் கையுறையை, அதற்கான குப்பை கூடையில் போடாமல், வாக்காளர்கள் ஆங்காங்கே வீசிச்சென்றனர். குறிப்பாக, தாரமங்கலம், செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி முன், பெரும்பாலான வாக்காளர்கள், ஓட்டுச்சாவடியை விட்டு வெளியே வந்து, அதற்கு முன், கையுறையை, திறந்த வெளியில் வீசிச்சென்றனர். அதன் பாதிப்பை, வாக்காளர் உள்பட யாரும் உணரவில்லை. இதே நிலை தான், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் காணப்பட்டன.


கிருமிநாசினி இல்லை: ஏற்காடு, புனித ஜோசப் துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், வாக்காளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படவில்லை. கிருமிநாசினி, கையுறையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, அதிகாரிகளிடம் வாக்காளர்கள் கேட்டபோது, தன்னார்வலர்கள் இல்லாததால், இப்பணியை மேற்கொள்ள முடியவில்லை எனக்கூறிவிட்டனர். இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் நிலவியது.

காற்றில் பறந்த உத்தரவு: சேலம் மாவட்டத்தின், 4,280 ஓட்டுச்சாவடி மையங்களுக்கான, 'பூத் சிலிப்' வினியோகிக்கும் பணி, ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டன. அவர்கள், வீடுகள் தோறும் சென்று, குறிப்பிட்ட அளவில் மட்டும் வழங்கிவிட்டு, அந்தந்த தொகுதி பொறுப்பாளர் அலுவலகங்களில் ஒப்படைத்துவிட்டனர். இதனால், நேற்று காலை, மணியனூர், காத்தாயம்மாள் நகர் ஓட்டுச்சாவடியில், 'பூத் சிலிப்' வாங்க வந்த மக்களுக்கு, ஓட்டுச்சாவடி மையங்கள் அருகே, ஆசிரியர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து, வாக்காளர்களுக்கு பாகம் எண், வரிசை எண்களை மட்டும், பட்டியலில் இருந்தும், மொபைல் போன் மூலம், ஆன்லைனில் பார்த்தும் தெரிவித்தனர். இதற்காக, அங்கு மக்கள் திரண்டதால், சமூக விலகலை கடைபிடிக்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தியும் பலன் இல்லை. அதேபோல், பள்ளப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில், தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., தேர்தல் அலுவலகங்களில், 'பூத் சிலிப்' விபரம் மட்டுமின்றி, டோக்கன், பணம் சாதாரணமாக வினியோகிக்கப்பட்டது. அவற்றை வாங்க, மக்கள் கூட்டமும் அலைமோதியது. போலீசார் இல்லாததோடு, சமூக விலகல் காற்றில் பறந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X