பொது செய்தி

தமிழ்நாடு

2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான ஓட்டுகள் எவ்வளவு?

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு, 4,280 ஓட்டுச்சாவடிகளில், நேற்று காலை, 7:00 மணிக்கு தொடங்கி நடந்தது. பதிவான ஓட்டு விபரம், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை, கணக்கீடு செய்து, அறிவிக்கப்பட்டது. அதன்படி, காலை, 9:00 மணி நிலவரப்படி, 3 லட்சத்து, 45 ஆயிரத்து, 366 ஓட்டுகள் பதிவாகின. இது, 11.5 சதவீதம்; 11:00 மணி நிலவரப்படி, 5,54,129 பேர் ஓட்டுப்போட்டது, 18.4 சதவீதம்; மதியம், 1:00 மணி நிலவரப்படி,

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு, 4,280 ஓட்டுச்சாவடிகளில், நேற்று காலை, 7:00 மணிக்கு தொடங்கி நடந்தது. பதிவான ஓட்டு விபரம், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை, கணக்கீடு செய்து, அறிவிக்கப்பட்டது. அதன்படி, காலை, 9:00 மணி நிலவரப்படி, 3 லட்சத்து, 45 ஆயிரத்து, 366 ஓட்டுகள் பதிவாகின. இது, 11.5 சதவீதம்; 11:00 மணி நிலவரப்படி, 5,54,129 பேர் ஓட்டுப்போட்டது, 18.4 சதவீதம்; மதியம், 1:00 மணி நிலவரப்படி, 5,68,318 பேர் ஓட்டுப்போட்டது, 18.8 சதவீதம்; 3:00 மணி நிலவரப்படி, 3,81,275 பேர் ஓட்டுப்போட்டது, 12.64 சதவீதம்; மாலை, 5:00 மணி நிலவரப்படி, 3,42,034 பேர் ஓட்டுப்போட்டது, 11.34 சதவீதம்; நிறைவாக, இரவு, 7:00 மணி நிலவரப்படி, 1,97,947 பேர் ஓட்டுப்போட்டது, 6.6 சதவீதம். மொத்த வாக்காளர், 30 லட்சத்து, 15 ஆயிரத்து, 469 பேரில், 23 லட்சத்து, 89 ஆயிரத்து, 69 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது, 79.2? சதவீதம். காலை தொடங்கிய ஓட்டுப்பதிவு, இரவு, 7:00 மணிக்கு நிறைவடைந்தது. 11 தொகுதியிலும், வாக்காளர்கள் வரிசையில் நின்று, அமைதியான முறையில் ஓட்டுப்போட்டனர். அதனால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. கட்சியினர் இடையே, பிரச்னை, மோதல் போக்கும் தலைதூக்கவில்லை. கடைசி நேரத்தில் ஏற்படும், கைகலப்பு, வன்முறையின்றி, சேலம் மாவட்டத்தில், அமைதியாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X