பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் 4 பேர் சுற்றிவளைப்பு; திட்டிய தி.மு.க., மீது போலீசில் புகார்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி தொகுதியில், நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களின் வீடுதோறும் சென்று, 'டோக்கன்' வழங்கினர். இதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, கெங்கவல்லி, மூன்றாவது வார்டை சேர்ந்த, இனாயுத்அலி, 66, தஸ்தகீர், 57, ஒதியத்தூர் சேகர், 55, சாமிநாதன், 56, ஆகியோரிடம், 140 டோக்கன்கள் இருந்தன. அவர்களை, டோக்கன்களுடன் தி.மு.க.,வினர் பிடித்து, கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர்.

கெங்கவல்லி: கெங்கவல்லி தொகுதியில், நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களின் வீடுதோறும் சென்று, 'டோக்கன்' வழங்கினர். இதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, கெங்கவல்லி, மூன்றாவது வார்டை சேர்ந்த, இனாயுத்அலி, 66, தஸ்தகீர், 57, ஒதியத்தூர் சேகர், 55, சாமிநாதன், 56, ஆகியோரிடம், 140 டோக்கன்கள் இருந்தன. அவர்களை, டோக்கன்களுடன் தி.மு.க.,வினர் பிடித்து, கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதனுக்கு புகார் அளித்தனர். ஆனால், அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, நேற்று இரவு, 8:00 மணிக்கு, கெங்கவல்லி பஸ் ஸ்டாப் அருகே, தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர். அதேநேரம் அ.தி.மு.க.,வினர், கெங்கவல்லி போலீசில் அளித்த மனுவில், 'கெங்கவல்லி ஓட்டுச்சாவடியில், தி.மு.க., பேரூர் செயலர் பாலமுருகன் தம்பி சத்யராஜ், தகாத வார்த்தையில் திட்டியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் அளித்தனர். இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, கெங்கவல்லி போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X