பொது செய்தி

தமிழ்நாடு

காரில் வந்த 10 ஓட்டுப்பதிவு இயந்திரம்; தி.மு.க.,வினர் தடுத்து நிறுத்தி முற்றுகை

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில், 18 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டவர்கள், 18 ஆயிரத்து, 900 பேர். நேற்றிரவு, 7:00 மணியளவில் ஓட்டுப்பதிவு முடிந்த கையோடு, கட்சி முகவர்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, பத்திரமாக லாக் செய்து, அதற்கான பெட்டிக்குள் வைத்து, சீலிட வேண்டும். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் உள்ளிட்ட குழுவினர்,

சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில், 18 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டவர்கள், 18 ஆயிரத்து, 900 பேர். நேற்றிரவு, 7:00 மணியளவில் ஓட்டுப்பதிவு முடிந்த கையோடு, கட்சி முகவர்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, பத்திரமாக லாக் செய்து, அதற்கான பெட்டிக்குள் வைத்து, சீலிட வேண்டும். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் உள்ளிட்ட குழுவினர், பெட்டிக்கு சீல் வைக்காமல், காலதாமதப்படுத்தி உள்ளனர். சீலிட்ட ஓட்டுப்பெட்டிகளை சேகரிக்க வேண்டிய மண்டல அலுவலர், திடீரென தனியார் வாகனம் ஒன்றில், 10க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன், சாவடிக்குள் கொண்டு வந்துள்ளார். அதை கண்கூடாக பார்த்த மேற்கு தொகுதி, தி.மு.க.,வினர், வாகனத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அவர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க, தேர்தல் பணி அலுவலர்கள், கதவை உள்பக்கமாக பூட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது. மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமையில், ஓட்டுச்சாவடி நுழைவு வாயில் முன்பாக, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின், தி.மு.க., வழக்கறிஞர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எக்காரணம் கொண்டும், வெளியில் இருந்து கொண்டு வந்த ஓட்டு பெட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என கூறி, தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதம் தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஜாகிர் காமநாயக்கன்பட்டி, தளவாய்ப்பட்டி, பழைய சூரமங்கலம், ரெட்டியூர் ஆகிய ஓட்டுச்சாவடிகள் முன்புறம், தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X