பொது செய்தி

தமிழ்நாடு

கள்ள ஓட்டு போட்டதாக சர்ச்சை; சமரசப்படுத்தி அனுப்பிய அதிகாரிகள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ், 20. இவர், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மையத்துக்கு, நேற்று மதியம் ஓட்டுப்போட சென்றார். அப்போது, அவரது ஓட்டு, ஏற்கனவே பதிவாகி இருந்தது. அவர், யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டதாக, குற்றம்சாட்டினார். ஆனால், அவரே தான் வந்து, ஓட்டுப்போட்டு சென்றதாக, முகவர்கள், தேர்தல் பணியாளர்கள் கூறினர். இதனால், அந்த

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ், 20. இவர், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மையத்துக்கு, நேற்று மதியம் ஓட்டுப்போட சென்றார். அப்போது, அவரது ஓட்டு, ஏற்கனவே பதிவாகி இருந்தது. அவர், யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டதாக, குற்றம்சாட்டினார். ஆனால், அவரே தான் வந்து, ஓட்டுப்போட்டு சென்றதாக, முகவர்கள், தேர்தல் பணியாளர்கள் கூறினர். இதனால், அந்த இளைஞரை சமாதானப்படுத்தி, போலீசார், தேர்தல் அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். அதேபோல், பேளூர் பேரூராட்சி, 13வது வார்டை சேர்ந்தவர் சந்திரா, 68. இவர், நேற்று மதியம், பேளூரில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்றபோது, அவரது ஓட்டை, வேறு ஒருவர் போட்டு விட்டது தெரிந்தது. இதுகுறித்து, தேர்தல் அதிகாரியிடம், சந்திரா புகார் செய்தார். இதனால், 'டெண்டர் ஓட்டு' அடிப்படையில், ஏற்கனவே போடப்பட்டிருந்த, அந்த வரிசை எண் ஓட்டு நீக்கிவிட்டு, இவரை, ஓட்டுப்போட, அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X