பொது செய்தி

தமிழ்நாடு

கவர்ச்சி பொறியை வைத்து பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விளக்கம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, தேமலஹள்ளியில், பயிர்களில் ஏற்படும் பூச்சிகளை, கவர்ச்சி பொறியை வைத்து கட்டுப்படுத்துவது குறித்து, கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி மாணவர்கள், தங்களது பணி அனுபவ திட்டத்துக்காக, தர்மபுரி மாவட்டம், பாப்பரப்பட்டி வேளாண் கல்லூரிக்கு களப்பயணம் வந்துள்ளனர். அவர்கள், தர்மபுரி

தர்மபுரி: தர்மபுரி, தேமலஹள்ளியில், பயிர்களில் ஏற்படும் பூச்சிகளை, கவர்ச்சி பொறியை வைத்து கட்டுப்படுத்துவது குறித்து, கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி மாணவர்கள், தங்களது பணி அனுபவ திட்டத்துக்காக, தர்மபுரி மாவட்டம், பாப்பரப்பட்டி வேளாண் கல்லூரிக்கு களப்பயணம் வந்துள்ளனர். அவர்கள், தர்மபுரி மாவட்டத்திலுள்ள முன்னோடி விவசாயிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி அடுத்த தேமலஹள்ளி கிராமத்துக்கு சென்ற அவர்கள், பயிர்களில் ஏற்படும் பூச்சிகளை கவர்ச்சி பொறிகள் மூலம் கட்டுப்பாடு செய்வது குறித்து விளக்கினர். மேலும், மஞ்சள் மற்றும் நீல அட்டை ஒட்டும் பொறி, தண்ணீர் பொறி, கவர்ச்சி பொறி ஆகியவற்றை கொண்டு, எவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது குறித்து, விவசாயிகளுக்கு அவர்கள் விளக்கினர். மேலும், இதன் முக்கியத்துவம் மற்றும் இவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினர். எனவே, கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாத்து கொள்ளலாம் என, அவர்கள் அறிவுறுத்தினர். இதில், இப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X