பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் டவர் அமைக்கக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் கிராம மக்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், மொபைல்போன் டவர் அமைத்து தரக்கோரி, வாழைத்தோட்டம், வள்ளிமதுரை, தோல்தூக்கி, தாதராவலசை ஆகிய, நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள், கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், டவர் அமைத்து தரப்படாததை கண்டித்து, நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று காலை, 7:30 மணிக்கு, தேர்தல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், மொபைல்போன் டவர் அமைத்து தரக்கோரி, வாழைத்தோட்டம், வள்ளிமதுரை, தோல்தூக்கி, தாதராவலசை ஆகிய, நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள், கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், டவர் அமைத்து தரப்படாததை கண்டித்து, நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று காலை, 7:30 மணிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரும், அரூர் ஆர்.டி.ஓ.,வுமான முத்தையன், தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததை அடுத்து, மக்கள் ஓட்டு போட்டனர். மொத்தமுள்ள, 1,355 ஓட்டுக்களில், 110 ஓட்டுக்கள் பதிவான நிலையில், மீண்டும், 11:30 மணிக்கு, மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மதியம், 3:00 மணிக்கு தாசில்தார் செல்வகுமார், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, தேர்தல் புறக்கணிப்பை கிராம மக்கள் கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X