அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதி

Added : ஏப் 07, 2021
Share
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.தமிழகம் முழுவதும், நேற்று சட்டசபை பொதுத்தேர்தல் நடந்ததால், வெளிமாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு வாக்களிக்க வந்த வண்ணம் இருந்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், அதிகளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.


தமிழகம் முழுவதும், நேற்று சட்டசபை பொதுத்தேர்தல் நடந்ததால், வெளிமாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு வாக்களிக்க வந்த வண்ணம் இருந்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், அதிகளவு கிராமங்களாகும். குறிப்பாக. மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாக உள்ளன. இவர்கள், தேர்தலையொட்டி தங்கள் சொந்த கிராமங்களுக்கு ஓட்டு போட வந்தனர். ஆனால், 90 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால், சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். சிலர், ஓட்டு போட்டுவிட்டு கிராமங்களிலிருந்து, வெளியூர் போக முடியாமல் தவித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, பொம்மிடி அரசு போக்குவரத்து டிப்போவில், 14 டவுன் பஸ்கள், 25 புறநகர் பஸ்கள், ஐந்து சிறப்பு பஸ்கள் என, 44 பஸ்கள் இயங்குகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதால், 90 சதவீத அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அவர்களாகவே விடுமுறை எடுத்து கொண்டதால் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஐந்து பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X