தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று நேற்று நடந்த தேர்தலில், புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.
இதுகுறித்து, தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஓட்டுச்சாவடியில் முதன்முறையாக ஓட்டளித்த நந்திபிரியா, 21, ஷாலினி,18 ஆகியோர் கூறியதாவது: தேர்தலில் ஓட்டளிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. இந்த உரிமையை பெற்று தர, நாம் ஏராளமான இழப்புகளை சந்தித்துள்ளோம். நாட்டில் நல்லாட்சி அமைய எப்போது வாய்ப்பு கிடைக்கும் என, விபரம் தெரிந்த வயதிலிருந்து, 18 வயதை எதிர்நோக்கி காத்திருந்தோம். தற்போது, 18 வயதை கடந்த நிலையில், முதல் முறையாக தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களது முதல் ஓட்டுக்களை யாருக்கு, அளிக்க வேண்டும் என, சிந்தித்து வாக்களித்துள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE